என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இத்தாலி ஓபன்
நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன்"
இத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற ரபெல் நடால் ஐந்தாவது முறையாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #Nadal #ItalianOpen
ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபெல் நடால் உலகத் தரவரிசையில் பெடரரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்திருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் காலிறுதியில் டொமினிக் தியெம் இடம் தோல்வியடைந்திருந்தார். இதனால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார்.
நேற்று நடைபெற்ற இத்தாலி ஓபன் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ 6-1, 1-6, 6-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் கடந்த வாரம் இழந்த நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பிடித்தார். நடால் ஐந்து முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
வருகிற 27-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனில் சிறப்பாக விளையாடி பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் நடால் உள்ளார்.

இத்தாலி ஓபன் டன்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். #ItalianOPen
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான சிமோனா ஹாலெப், 4-ம் நிலை வீரரான எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
4-ம் நிலை வீரரான ஸ்விடோலினாவின் ஆக்ரோஷத்திற்கு ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஸ்விடோலினா 6-0, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஆர் பராஹ் - ஜே கேபல் ஜோடி 3-6, 6-4, 10-4 என சவுசா - கர்ரேனோ பஸ்டா ஜோடியை வீழ்த்தியது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் டி ஸ்சூர்ஸ் - ஏ. பார்ட்டி ஜோடி பி ஸ்ட்ரைகோவா- ஹ்லாவாக்கோவா ஜோடியை 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார். #ItalianOpen #Sharapova
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) விரட்டினார்.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 40-வது இடம் வகிப்பவருமான ரஷியாவின் மரிய ஷரபோவா, 6-ம் நிலை வீராங்கனையும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) எதிர்கொண்டார். 3 மணி 13 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் ஷரபோவா 6-7 (6-8), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் ஷரபோவா டாப்-10 வீராங்கனை ஒருவரை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.#ItalianOpen #Sharapova

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள். #ItalianOpen #Nadal
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஒன்றில் முதல் நிலை வீரரான ரபெல் நடால் இத்தாலியின் பபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார்.
சொந்த நாட்டில் விளையாடிய ஃபோக்னினி ரபெல் நடாலுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டில் ஃபோக்னினி சிறப்பாக விளையாடி 6-4 என வெற்றி பெற்றார். ஆனால், நடால் அடுத்த இரண்டு செட்டுகளை 6-1, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச் ஸ்பெயினின் பப்லோ கர்ரெனோ பஸ்டாவை எதிர்கொண்டார். இதில் மரின் சிலிச் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜோகோவிச் - நிஷிகோரி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

×

X